ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் தேவை : சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.


பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை, ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விசேட உரையோன்றை நடத்தியிருந்தார்.


ஜனாதிபதியின் இந்த உரைதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.