முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம்

இலங்கையின் பொருளாதார முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறைக்கு வராது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.