நூறு கோடி டொலர் கடனில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம்



ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 100 கோடிக்கு அதிகமான அமெரிக்கன் டொலரை கடன் செலுத்த வேண்டியுள்ளதாக துறைமுக, கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள், அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.


அந்நிறுவனம் லீசிங் தவணை செலுத்த வேண்டியுள்ளதுடன் வங்கிகளுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் கோடிக்கணக்கான கடனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் 17 கோடி அமெரிக்கன் டொலரை, வெளிநாட்டு கடனாகவும் அதனைத்தவிர லீசிங் தவணையாக 08 கோடி டொலர் அமெரிக்கன், டொலரை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை இந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய ரீதியிலான வங்கிகளுக்கு, 80 கோடி அமெரிக்க டொலர் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


(லோரன்ஸ் செல்வநாயகம்)