அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவிருந்த 15,000 முட்டைகள் கண்டுபிடிப்பு

மருதானை மரியகடையில் உள்ள கடையொன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிக விலையில் முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (12) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், சோதனை நடத்திய அதிகாரிகள், அரசு நிர்ணயித்த 44 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில், முட்டை கையிருப்பை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.