🔴பாணந்துறை பிரதேசத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளில் பள்ளி வாசல்களுக்கு அதியுயர் பாதுகாப்பு.

பாணந்துறை பிரதேசத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கிடைத்த தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பாணந்துறை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள 14 முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும்,


பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் 3 இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கும், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் 6 பள்ளிவாசல்களுக்கும் இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் நடமாடும் சேவை வாகனங்கள் மூலம் விசேட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.