🟢ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள்


தகுதியான நபர்களுக்கு அரசாங்கத்தால் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


கிட்டத்தட்ட 3.2 மில்லியன் குடும்பங்களின் விண்ணப்பங்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கிடையில், நலன்புரி திட்டத்திற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தகவல் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 


தரவுக் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் நலன்புரி உதவிகள் பெறத் தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனைத்து பிரதேச செயலகங்களிலும் கிராம சேவையாளர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.