முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!


முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வரைபொன்றை சமர்ப்பித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பாரிய சிரமங்களை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்துறைக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் உடனடியாக வரைவை பரிசீலனை செய்து அங்கீகரிக்கும் என சங்கம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

tuk-tuks என்றும் அழைக்கப்படும் முச்சக்கர வண்டிகள் இலங்கையில் குறிப்பாக நகர்ப்புறங்களில் ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும்.

இருப்பினும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், அதிக கட்டணம் வசூலித்தல், ஒழுங்குமுறையின்மை போன்ற பிரச்னைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தேச வரைவு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், இலங்கையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முச்சக்கர வண்டித் தொழிலைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறமாய் குறிப்பிடத்தக்கது