கடன் வாங்க பயப்பட வேண்டாம் - இலங்கை எப்போது செல்வந்த நாடாகுமென ஜனாதிபதி ரணில் கூறிய விடயம்


கடன் வாங்குவதற்கு பயப்பட வேண்டாம், கடனை செலுத்தவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் .பெற்ற கடன்களை முறையாக முதலீடு செய்தால் 15 முதல் 20 வருடங்களின் பின்னர் இலங்கை செல்வந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
3 வருடங்களின் பின்னர் மீண்டும் சிங்கள, தமிழ் புத்தாண்டை தேசிய விழாவாக இலங்கை மக்கள் கொண்டாடுவது அதிர்ஷ்டம் என்றும் அவர் சிறிகொத்தவில் உள்ளஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க தலைவர் தெரிவித்தார்