🔴அக்குரணை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


கண்டி அக்குரணையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நேற்றிரவு முதல் அக்குரணை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். 


பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அவசர இலக்கத்திற்கு நேற்று இரவு அக்குரணையில் சில நாசவேலைகள் இடம்பெறவுள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 


அதன்படி, உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர். 


தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தற்போது அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.