🔴வட, கிழக்கில் இன்று ஹர்த்தால்

 


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.


தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று(25) மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த ஹர்த்தால் பிரச்சாரம் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து தடைபடலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.