கறுவாவுக்கு சலுகை விலை கோரல்


பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள கறுவாப்பட்டைக்கு சலுகை விலை வழங்குமாறு கறுவா வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஐக்கிய சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


கறுவா விலை வீழ்ச்சியினால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் அழைப்பாளர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.