துருக்கிய பள்ளி வாசல் ஒன்று தொழுகை முடிந்ததும் அரை மணி நேரம் சிறுவர்கள் விளையாட அனுமதி இது சரியா?

 


துருக்கிய பள்ளி வாசல் ஒன்று தொழுகை முடிந்ததும் அரை மணி நேரம் சிறுவர்கள் விளையாட அனுமதித்துள்ளதாம்.....


இலங்கைச் சூழலில் இது போன்ற ஏற்பாடுகள் இல்லாமை/மறுக்கப்படுவது தான் நமது சமூகம் மஸ்ஜித்களை விட்டும் தூரமாகுவதற்கு காரணமாக அமைகின்றன போன்ற மட்டமான பதிவுகளை ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.


இம் மந்த புத்தி சிந்தனையை நியாயப்படுத்த நபிகளாரின் பேரர்களான ஹஸனையும் ஹுஸைனையும் துணைக்கு கொண்டு வந்து நிறுத்துகின்றனர்...


நபிகள் நாயகம் தொழுகையில் இருக்கும் போது ஹஸனும் ஹுசைனும் அவர்களது தோள் புயங்கள் மீது ஏறி அமர்ந்து விளையாடிய சம்பவங்கள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது என்பது உண்மை..


நபிகள் நாயகம் தொழுகையில் இருக்கும் போது அவர்களது பேரக் குழந்தைகள் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தற்செயலான சம்பவத்தை மேற்கோள் காட்டி பள்ளி வாசல்களில் சிறுவர்கள் விளையாட நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்???


 சப்தமிட்டு அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த நபித் தோழர்கள் நபிகள் நாயகம் எச்சரிக்கை செய்தார்கள்.


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் பிறகு அடுத்த கடமை ஒன்று இருக்குமெனில் அது ஹலாலான முறையில் சம்பாதிப்பதாகும் என்று வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள் நாயகம் பள்ளி வாசல்களில் வியாபாரம் செய்வதை தடுத்தார்கள்...


 பள்ளிவாசலில் கவிதைகள் படிப்பதனை தடுத்தார்கள்.


இப்படி பலவற்றை தடைசெய்ததன் பின்னணியில் தொழுகை மற்றும் இஃதிகாஃப் போன்ற வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு என்ற ஒன்றை தவிர வேறு காரணிகள் இருக்கவில்லை.


அல்குர்ஆனையும் ஹதீஸுகளையும் புறம் தள்ளிவிட்டு தமது புத்தியை முதன்மைப்படுத்துவது முஃதஸிலிய்ய சிந்தனை வாதமாகும்..


தம்யீஸ்(z) பிரித்து அறியும்  வயதைக் கடக்காத சிறார்களை பள்ளிவாசலுக்கு அழைத்து வருவது வரவேற்கத்தக்கதல்ல என்பது தான் ஏகப்பட்ட அறிஞர்களின் நிலைப்பாடும் ஆகும்..