🔴புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை


எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியில் இருந்து சுயேச்சை எம்.பியான  ஒருவருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களளுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.