🔴எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்


அதிக மழையுடனான வானிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2500 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


காலி, மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 19 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 229 பேர் எலிக்காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.