🔴எரிவாயு விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது

 

எரிவாயு விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.


பேக்கரி உற்பத்தியாளர்கள் சுமார் 75% டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 2000க்கும் குறைவானவர்களே எரிவாயுவைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து கோதுமை மா, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றின் விலைகள் குறைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.