பாணந்துறை கடற்கரையில் ஏழு அடி முதலை


பாணந்துறை கடற்கரைக்கு இன்று சுமார் ஏழு அடி நீளம் கொண்ட முதலை ஒன்று வந்துள்ளதாக பாணந்துறை உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்கரைக்கு அருகில் உள்ள கல் அருகே முதலை இருப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

முதலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பணிகள் நாளை (29) இடம்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலையை கடற்கரையில் இருந்து அகற்றும் வரை, கடலில் நீராடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.