🔴பேராதனை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் ஆசிரியை.

பேராதனை - கொப்பேகடுவ பகுதியில் இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


பேராதனை - கொப்பேகடுவ பகுதியில் வைத்து குறித்த ஆசிரியை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்று காலை முன்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.


 ஆனால் அவரால் வீட்டிலிருந்து 750 மீட்டர் தூரம் கூட செல்ல முடியவில்லை.


 இச்சம்பவம் குறித்து அஞ்சலியின் தாயார் கூறுகையில், தனது மகள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே அவரது காதலன் தொலைபேசியில் அழைத்து,  அஞ்சலி விபத்தில் சிக்கியதாக கூறினார்.

 

 "அவளுக்கு பழைய காதல் உறவு ஒன்று இருந்தது.. அதில் ஏதாவது பிரச்சனையா என்று அடிக்கடி மகளிடம் கேட்பேன். அவர் என்னிடம் சொல்வதில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.


 பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த அவர், பிரதேச வாசிகளின் முயற்சியில் இலுக்தென்ன மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால்  சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.


 பேராதனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 எனினும், அஞ்சலியின் தங்க நகையை மீட்க வந்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அஞ்சலியின் சகோதரி தெரிவித்துள்ளார்.