சஜித் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறோம் என்ற புதிய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி சமூகமயமாக்கியுள்ளன.

இந்தப் போலிச் செய்தியை முற்றாக நிராகரிப்பதுடன், போலிச் செய்தியைப் போலவே அதனை இழிவாகக் கண்டிக்கிறோம்.

படுமோசமான ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாக இருக்கும் தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாக ஆரம்பம் முதலே எச்சரிக்கின்றோம், விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வியடைந்த வேலைத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.