🔴மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும்

மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அந்த ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


2023ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரத் தேவை தரவுகள் உண்மையான தேவையை விட மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என்பதை தாங்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பெப்ரவரி மாதம் இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட 66 சதவீத மின்சாரக் கட்டணமானது தவறான முடிவாகும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவிக்கின்றார்.