🔴உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அனுமதி


இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.


உலக வங்கியுடன் கடன் வசதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.