🔴7 பேரின் உயிர்களை காவுகொண்ட அதே இடத்தில் இன்று வேன் விபத்து !

நானுஓயா-ரதெல்லை குறுக்கு வீதியில் கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஏழு பேரின் உயிர்களை பலியெடுத்த வாகன விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் இன்றைய தினம் வாகன விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.


நானுஓயா, ரதெல்லை பகுதியில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாதுபோக வேன் பின் நோக்கி சென்றமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.