🔴முட்டைக்காக ஒன்றிணைய அமைச்சர்அழைப்பு

நாட்டில் உள்ள முட்டைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பண்ணைத் தொழிலில் பங்கு வகிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று நடைபெற்ற  கூட்டத்தில் தெரிவித்தார்.


குறித்த கூட்டத்தில் முட்டைப் பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, விவசாயத்துறை அமைச்சு, விலங்கு உற்பத்தி  மற்றும் சுகாதாரத்துறை மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


முட்டைப் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.


குறித்த தொழில்துறை அங்கத்தவர்களின் கணிப்பின் படி இலங்கையில் நாளொன்றுக்கு 7 மில்லியன் முட்டைகள் தேவைப்படுகின்றன. உள்நாட்டு முட்டை உற்பத்தியானது தற்போது நாளொன்றுக்கு 5.2 மில்லியனாக காணப்படுகிறது. எனவே 1.4 மில்லியன் முட்டைகளுக்கான தட்டுப்பாடு நாட்டில் நிலவுகின்றது.


இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு முட்டை உற்பத்தியைப் பெருக்குவதால் முட்டை இறக்குமதிக்கான தேவை இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.