🔴புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மீண்டும் டுபாய் விஜயம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு டுபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் தொண்ணூற்றொரு கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து பிரமுகர் முனையத்திலிருந்து வெளியேறும் போது கைது செய்யப்பட்டார்.


பின்னர் அவர் 75 லட்சம் ரூபாய் அபராதத்தில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.