🔴பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் காயம் - நாய் பலி


கம்பளை, பன்விலதென்ன பிரதேசத்தில் இன்று (21) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட வீடு ஒன்றை பொலிஸ் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


சம்பவத்தில் இளைஞரின் வீட்டில் இருந்த நாயும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.