மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா - பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!


அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (07) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினர் யஹ்யா (பலாஹி) சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில், கல்லூரியின் உபதலைவர் கலீலுல் ரஹ்மான் உள்ளிட்ட பல உலமாக்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர்.


இதன்போது, 15 மாணவர்களுக்கு “அல்-ஆலிம்” பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.