🔴சஜித் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கூட்டம்

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.


இன்று (08) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.இந்த விவாதத்திற்கு எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் ஏனைய அரசியல் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்பது தொடர்பில் குறிப்பிட்ட யோசனையை முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் தொடர்பில் எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளது.


எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடத்தப்பட்டு அதனை எதிர்கட்சி எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.