🔴எனக்கும் ஜெரோமுக்கும் தொடர்பில்லை; மஹிந்த


சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னான்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில்   தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் போதகர் ஜெரோமின் அலுவலகத்திலிருந்து தன்னை சந்திக்க அழைப்பு வந்ததால் ஒரே ஒருமுறை தான் அவரை சந்தித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.