அரபு நாட்டவர்களை இலங்கைக்கு அழைக்க திட்டம், ஒப்பந்தமும் கைச்சாத்து
அரபு சுற்றுலா மாநாடு (ஏடிஎம்) -03- தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள சுற்றுலா மாநாடுகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அரபு சுற்றுலா மாநாட்டிற்கு அரபு சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய நிறுவனங்களும் இணைகின்றன.


அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுடன் இலங்கை சுற்றுலா, விமான அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்
இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக எமிரேட்ஸுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.


டுபாயில் இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் எமிரேட்ஸ் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் தனது உலகளாவிய வலையமைப்பின் ஊடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.