🔴எனது கருத்துக்கள் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மக்களை பாதித்து இருந்தால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ; இன்றிரவு நாடு திரும்ப உள்ள ஜெரோம் பெர்னாண்டோ


தனது கருத்துக்கள் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய மக்களை பாதித்திருப்பின், தம்மை மன்னிக்குமாறு போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன், அவர் மீளவும் நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் அறிக்கை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது, இது நாட்டில் பரபரப்பான தலைப்பாக மாறியது.


பிற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.


இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வாக்குமூலங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மேலும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளதுடன், அவரது சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.