🔴திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் கடத்த முயற்சித்ததாக முறைப்பாடு.


 திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் கடத்த முயற்சித்ததாக காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 22 ஆம் திகதி குறித்த மாணவர் மேலதிக வகுப்பிற்காக சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் சிலர் கடத்த முயற்சித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.