பண்ணவ மாணவி ஒருவருக்கு பிரித்தானிய பக்கின்ஹம் மாளிகையிலிருந்து ஒரு மடல்!


பண்ணவையை சேர்ந்த செல்வி பசீனா பாஹிம் என்கின்ற மாணவிக்கு பிரித்தானிய பக்கின்ஹம் மாளிகையிலிருந்து இளவரசர் சார்ல்ஸ் இடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது! 


மேற்படி மாணவி  இரண்டாம் எலிசபத் மகாராணியின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார், அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே மேற்படி கடிதம் இளவரசர் சார்ல்ஸ் இன் கையொப்பத்துடன் குறித்த மாணவிக்கு அனுப்பப் பட்டிருக்கின்றது, ஏற்கனவே குறித்த மாணவி தரம் ஆறில் கற்றுக்கொண்டிருக்கும் போதும் பக்கின்ஹம் மாளிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

ஆரம்பக்கல்வியை பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கற்ற பசீனா பாஹிம்  தற்போது வெல்பொத்துவெவ அல் இல்மியா கல்லூரியில் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றார்.

 

பக்கின்ஹம் மாளிகையை தனது வாழ்வில் என்றாவது ஒரு நாள் தரிசிக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்துடன் இருக்கும் குறித்த மாணவிக்கு இன் ஷா அல்லாஹ் அவரது  இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்களையும்   பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!


நன்றி - PANNAWA SMS