🔴வடிவேல் சுரேஷ், ராஜிதவுக்கு காலக்கெடு விதித்து ‘ஓலை’ அனுப்பியது ஐக்கிய மக்கள் சக்தி!


கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளது.


பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட ஜனக ரத்னாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. வாக்கெடுப்பின்போது சபையில் இருக்க வேண்டும் எனவும் எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


எனினும், கட்சி முடிவுக்கு எதிரான வகையில் இவ்விரு எம்.பிக்களும் செயற்பட்டுள்ளனர்.


இந்நிலையிலேயே இவ்விரு எம்.பிக்களுடனும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.


குறித்த கடிதம் கடந்த 29 ஆம் திகதி எதிரணி பிரதம கொறடாவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.