வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்களுக்கு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (8) வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.