🔴கம்பளை – அம்புலுவாவ சரணாலய பகுதியில் ஆடையின்றி சுற்றித்திரியும் பெண் தொடர்பில் பொலீஸார் எடுத்த நடவடிக்கை.

கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறியபடி சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.


சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்தனர்.


அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.


கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.


பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், குறித்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.