பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தங்கத்துடன் கைது




கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார்.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.


3.5 கிலோ கிராம் தங்கத்துடன் அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும், அவர் தற்போது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள விடயம் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


மூன்றரை கிலோ கிராம் தங்கத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறும், இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கோரிக்கை விடுத்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் கோரிக்கைக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொண்டு, உரிய சட்டங்களின் பிரகாரம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.