🔴கொவிட் இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது


கொவிட் -19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


ஒரு அறிக்கையில், கொவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


மேலும், கடந்த சில மாதங்களில், கொவிட் வைரஸை எதிர்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களிடையே உருவாகியுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த 03 ஆண்டுகளில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் கொவிட் தொற்றுநோய் நிலைமையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


இருப்பினும், கொவிட் -19 இன் தற்போதைய பரவலைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு, உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழு, இது இனி உலகளாவிய சுகாதார அவசர நிலையாக கருதப்படாது என்று அறிவித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் நாளாந்தம் சுமார் 06 கொவிட்-19 நோயாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், அது ஆபத்தான நிலைமையல்ல என தொற்றுநோய் பிரிவின் தலைவர் வைத்தியர் சமிதி கினிகே தெரிவித்துள்ளார்.