பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த தீர்மானம்!கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம்.பௌசியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் திங்கட்கிழமை (08) பிற்பகல் கூடிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது எம்.பி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, வெற்றிடமான பதவிக்கு பௌசி தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.