🔴ரூ.8 கோடிக்கு 7 கோடி அபராதம்: ரூ.7 கோடிக்கு 75 இலட்சம் அபராதமா?

 
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையம்  ஊடாக  சட்டவிரோதமாக 8 கோடி ரூபாய் பெறுமதியான   தங்கத்தை   கொண்டு வந்த நபருக்கு 7 கோடி  ரூபாய் அபராதமும் . ஆனால் 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் அலைபேசிகளைக் கொண்டு வந்த போது பிடிபட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.க்கு 75 இலட்சம் ரூபாவுமே அபராதம் .இது எந்த வகையில் நியாயம்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில்  செவ்வாய்கிழமை (06) விசேட கூற்றொன்றை முன்வைத்தே  கேள்வியெழுப்பினார.  


 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை பின்பற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கடமைப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பல சரத்துக்கள் உள்ளன. எனினும், விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில்  கொண்டு வந்த தங்கம் மற்றும் அலைபேசிகளுடன்  பிடிபட்ட   அலி சப்ரி ரஹீம் எம்.பி. மீது  ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.