🔴இலங்கைக்கு உதவி செய்ய உள்ளவர்களை சந்திக்க, ஜனாதிபதி லண்டன் மற்றும் பிரான்ஸ் பயணம்





ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.


இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி பெரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பெரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது.


இந்தநிலையில், இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.