🔴இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீளும்: ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் எனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.


⭕அனைத்து தரப்பினரின் ஆதரவு


இன்றைய தினம் (30.06.2023) இலங்கை பணிப்பாளர் நிறுவகத்தில் (SLID) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.