🔴ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றத்தைக் காப்பாற்ற வேண்டும்


 COPF தலைவர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டது தொடர்பில் கடந்த வாரம் எதிர்கட்சித்


தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டதையடுத்து ,பாராளுமன்ற விவகாரங்களை ஜனாதிபதி கட்டுப்படுத்துவதிலிருந்து காப்பாற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய இன்று தெரிவித்துள்ளார்.


பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையீடு செய்த சம்பவம் குறித்து அவர்  இவ்வாறு கருத்து தெரிவித்தார்.