மாவடிப்பள்ளி கமு/அல்/அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தும் பணியாளரின் இரண்டு வருட மாத சம்மளத்தை பொறுப்பெடுத்த தனவந்தர் அஸ்லம்!


- அஹமட் சாஜித் -


மாவடிப்பள்ளியில் ஒரே ஒரு பாடசாலை கமு/அல்/அஸ்ரப் மகாவித்தியாலயமாகும். இப் பாடசாலையில் தரம் 1 தொடக்கம் கா.பொ.தா சாதாரண தரம் வரை 615 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப் பாடசாலையின் முற்றம் மற்றும் சுத்தம் செய்யக் கூடிய சுற்றுப்புறச் சூழலின் பரப்பு பெரியதாக காணப்படுவதாலும், நிழல்தரக் கூடிய மரங்கள் அதிகமாக இருப்பதனாலும், நாளாந்தம் சுற்றுப் புறச்சூழலை சுத்தப்படுத்தும் பணியை ஒரு நபர் மாத்திரம் செய்வது மிகப்பெரும் கடினமாகவும் இருந்து வருகின்றது.


இதனை நிவர்த்தி செய்வதாயின் இன்னுமொரு பணியாளரின் தேவைப்பாடு அத்தியாவசியமாக இருப்பதனாலும், அப் பணியாளரை உத்தியோகபூர்வமாக நியமிப்பதில் நிர்வாகச் சிக்கல் காணப்படுவதாலும், மாதாந்த சம்பள அடிப்படையில் இன்னுமொரு பணியாளரை நியமித்து பிரச்சியையைத் தீர்ப்பதற்கு மாதாமாதம் சம்மளம் வழங்குவதற்குரிய போதுமான நிதியும் பாடசாலை நிர்வாகத்திடம் இல்லாமையானது மிகப்பெரும் குறையாக காணப்படுகின்றது.


இது தொடர்பான நிலைப்பாடுகளை அறிந்த மாவடிப்பள்ளி அபிவிருத்திக் குழுவானது, உடனடியாக பாடசாலை அதிபர் ரஜாப்டீன் ஆசிரியரை அனுகி இது சம்மந்தமாக கலந்துரையாடிய பின் இதற்கான தீர்வாக மாதாந்த சம்பள அடிப்படையில் ஒரு பணியாளரை நியமிப்பதற்கும் அவருக்கான மாதாந்த சம்பளத்தை வழங்குவதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவதென்றும் ஆராய்ந்த போது, மாவடிப்பள்ளி அபிவிருத்திக் குழுவின் நிர்வாக சபை உறுப்பினரான தனவந்ததர் தொழிலதிபர் அஸ்லாம், தானாகவே முன்வந்து நான் படித்த பாடசாலைக்கு என்னால் முடிந்த உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்று பல நாள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதற்கான நேரம் காலம் தற்போது அமைந்துள்ளது, ஆகவே எனது பாடசாலையின் சுற்றுப்புறச் சூழலை துப்பரவு செய்வதற்கான ஒரு பணியாளரை நீங்கள் தெரிவு செய்து, மாதா மாதம் அவருக்கு எவ்வளவு பணம் ஊதியமாக கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு கூறுங்கள், அவருக்கான மாதாந்த சம்மளத்தை இரண்டு வருடங்டகளுக்கு வழங்குவதற்கு நான் தயார் என வாக்குறுதியளித்தார் அல்ஹம்துலில்லாஹ்.


அதன் அடிப்படையில் இன்று பாடசாலைக்கு விஜயம் செய்த மாவடிப்பள்ளி அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் ரஜாப்டீன் ஆசிரியர் அவர்களை சந்தித்து இது சம்மந்தமாக கலந்துரையாடி, பாடசாலை சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்யும் பணியாளரையும் நியமித்து அதற்கான உடன்படிக்கையையும் தனவந்தர் அஸ்லமோடு இன்று கைச்சாத்திட்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ். தனவந்தர் அஸ்லமுடைய நல்ல எண்ணங்களையும், திட்டங்களையும், இறைவன் அங்கீகரிப்பானாக. மேலும் மேலும் நல்ல பறக்கதுகளை அவருக்கு வழங்கி இன்னும் பல உதவிகளை மக்களுக்கு செய்ய இறைவன் நசீபாக்குவானாக.


எனவே இப்பெரும் பணியை செய்து பாடசாலைக்கும், மாணவர்களுக்கும், ஊருக்கும் உதவிய தனவந்தர் தொழிலதிபர் அஸ்லம் அவர்களுக்கும், இதனை நிறைவேற்ற முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் செய்த மாவடிப்பள்ளி அபிவிருத்திக் குழுவிற்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், மாவடிப்பள்ளி மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அத்தோடு எமது பாடசாலையில் இன்னும் பல அத்தியவசிய தேவைகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. இவைகளைக் கருத்திற்க் கொண்டு, இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்கள் பலர் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், பணம் வசதிபடைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்திலும் உள்ளீர்கள். எனவே இதனை உங்களாலும் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும். நீங்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு தானும் உதவும் நிய்யத்தை இன்றே வைத்து தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து உங்களால் முடியுமான உதவி ஒத்தாசைகளை பாடசாலை அதிபரைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடி நிறைவேற்றுமாறும் அன்பாய் வேண்டுகிறோம்.