🔴தடுப்பூசியால் பல குழந்தைகள் இறந்துள்ளனர்”

 


பேராதனை வைத்தியசாலையில் வெளியிடப்பட்ட மயக்க ஊசி காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஊசிகள் அகற்றப்படுவதாக கூறப்பட்டாலும், அவை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;


“.. பேராதனை வைத்தியசாலையில் மயக்க ஊசி மூலம் விஷம் கலந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பும் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. இந்த நச்சுத் தடுப்பூசிகள் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் செய்தி. இதை பிரதமர் ஆராய்ந்து தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்…” எனத் தெரிவித்திருந்தார்.