சீனா செல்கிறார் அலி சப்ரி


சீன வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவில் தங்கியிருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.