🔴மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்தது.


 மின்கட்டணங்களை செலுத்தாத  பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எவற்றையும் அரசாங்கம் வழங்கவில்லை  என தெரிவித்த அவர், அரசாங்கம் மின்கட்டணங்களை அதிகரித்துள்ளதால் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.  


”கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆலயங்களிற்கான மின்கட்டணங்கள் 555 வீதத்தினால் அதிகரித்த போது, அரசாங்கமும் ஜனாதிபதியும் வழிபாட்டுத் தலங்களுக்கு சூரியசக்தியில் இயங்கும் மின்கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.


ஆனால் இதுவரை அந்த மின்கலங்கள் எமக்குக் கிடைக்கவில்லை  , எனினும் அம்பாந்தோட்டையில் உள்ள  பௌத்த விகாரை உட்பட சில வழிபாட்டுத் தலங்களின்  மின்இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.