🔴இ.போ.ச பஸ்களில் இனி நடத்துனர் இல்லை


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படுத்த ஆராயப்பட்டுள்ளது  என போக்குவரத்து அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். ஆகையால், அந்த பயணச்சீட்டை சாரதியால் விநியோகிக்க முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.