🔴பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி!கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.