🔴டயானாவின் ஆட்டம் விரைவில் அடங்கும்


டயானா கமகே  தண்ணீர் சூடாகும் வரை மட்டுமே நடனமாடுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


நாட்டின் சுதந்திரமான நீதித்துறை மீது தமக்கு நூறு சதவீத நம்பிக்கை இருப்பதாகவும், இலங்கைப் பிரஜையற்ற டயானா கமகேவைக் காப்பாற்ற அரசாங்கம் என்ன ஆட்டம் ஆடினாலும் இறுதியில் நீதியே வெல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தேர்தலை பிற்போட்டு அரசாங்கம் ஆடும் ஆட்டமும் டயானாவின்ஆட்டமும் விரைவில் முடிவுக்கு வரும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.