🔴குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!


பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டிடமொன்றின் மேல் மாடியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


73 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 


உயிரிழந்தவர் ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் அந்த அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது. 


கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள துப்புரவுப் பிரிவுக்கு சேவை நிமித்தமாக இன்று காலை சென்று கொண்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவர், அதன் முன் நாற்காலியில் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். 


இதன்படி, தலங்கம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.