டெங்கு நோயின் தாக்கம் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,இலங்கையில் டெங்கு தொடர்பான மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதன்படி, மேலும் இரு டெங்கு இறப்புகள் பதிவாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் படி, 2023 ஆம் ஆண்டில் 44,038 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 9,638 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் .